News Just In

12/15/2021 08:44:00 PM

றஹ்மத் நகர் கிராமத்தில் இரவு வேளையில் புகுந்த யானைகளின் அட்டகாசத்தால் தோட்டப் பயிர்கள் சேதம்!

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள றஹ்மத் நகர் கிராமத்தில் இரவு வேளையில் புகுந்த யானைகளின் அட்டகாசத்தால் தோட்டப் பயிர்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

றஹ்மத் நகர் கிராமத்தில் வாழும் மக்கள் தங்களது காணியில் பயன்தரும் மரங்கள், வேளான்மை மற்றும் மரக்கறி தோட்டங்கள் அமைத்து பராமரித்து வரும் நிலையில் இரவு வேளைகளில் வரும் யானைகள் இவற்றை சேதப்படுத்தி செல்லும் நிலைமை காணப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இரவு வேளையில் கிராமத்திற்கு வருகை தந்த ஏழு யானைகள் தென்னை மரம், கச்சான், வேளான்மை, வீட்டுப் பயிர்கள் மற்றும் வேலிகளை துவசம்சம் செய்து சென்றுள்ளதுடன், எங்களுக்கு உயிர் பயத்தினையும் ஏற்படுத்தி சென்றுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் றஹ்மத் நகர் பகுதி மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கும், பயிர்களை யானைகள் துவம்சம் செய்யாது எமது பகுதியை சுற்றி யானைகளிடம் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு யானை வேலிகளை அமைத்து தருமாறு பாதிக்கப்பட்ட மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்








No comments: