News Just In

12/07/2021 06:18:00 AM

ஒமிக்ரோன் வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி வெளியிட்டுள்ள தகவல்!

உலகளாவிய ரீதியில் தற்போது வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் வைரஸ் வகை குறித்து ஒரு முடிவுக்கு வரமுடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் மாநாடு ஒன்றில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோன் தீவிரமான வகையாக மாறுமா என்று கணிக்க இயலாது. மிகவும் பரவக்கூடியதாக உள்ளது. தென் ஆப்ரிக்காவில் தினசரி பாதிப்பு இரட்டிப்பாகின்றது. நாம் தயாராகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் பீதி அடையாமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments: