News Just In

12/17/2021 02:45:00 PM

ஒரு இனத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமையை கேட்பது இனவாதம் அல்ல - ஹாபீஸ் நஷீர் அஹமட்




இனவாதம் என்பது ஒரு இனத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமையை கேட்பது இனவாதம் அல்ல மாறாக இன்னும் ஒரு இனத்துக்கு கிடைக்க இருக்கின்ற நியாயமான உரிமையை கிடைக்காமல் தடுப்பதுதான் இனவாதமாகும் என் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஷீர் அஹமட் (Hafiz Nasir Ahmed) தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் 2020ம் ஆண்டு சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக காணி பங்கீட்டில் பெரிய இனவாதம் இடம் பெற்றுள்ளது. ஒரு சமூகத்தை படுகுழியில் தள்ளிய விடயம் வடக்கில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றி இருக்கலாம் அது ஆயுத கலாச்சாரத்தில் இடம் பெற்றது.

ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்றது ,வேறு அரசியல் அதிகாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக முஸ்லீம் ஒருவர் இல்லாமல் போனது இந்த முறை மாத்திரம் தான்.
அப்படி இருந்த போதும் கடந்த காலங்களில் எமது காணிகள் எப்படி பறிபோனது இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.இதனை பேச வேண்டிய தேவை உள்ளது.

ஏன் என்றால் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் கனடாவில் அடிவாங்கி விட்டு இங்கு வந்து நாடாளுமன்றத்தில் பேசுகிறார் முஸ்லீம்களுக்கு நாட்டில் காணிகள் இல்லை மட்டக்களப்பில் பிரச்சினை இல்லை முஸ்லீம்கள் பிள்ளையானுடன் சேர்ந்து காணி இல்லை என்று சொல்லி நாடகம் ஆடுகிறோம்.

காணி இல்லை என்று அவர் சொன்னது எனக்கு பிரச்சினை இல்லை. அவர் சொன்ன கருத்திற்கு இந்த பிரதேசத்தில் இருந்து எவராவது ஏன் என்று கேட்காமல் கோமா நிலையிலா இருந்தீர்கள் என்ற கவலை தான் என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: