ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் 50வது ஆண்டு பொன்விழா வியாழக்கிழமை 16.12.2021 அச்சபையின் மட்டக்களப்பு மாவட்டப் பணிமனையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எஸ்.ஏ.எம். சலீம் மௌலானா தலைமையில் சர்வமதப் பிரார்த்தனைகளுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி தேசியக்கீதம் இசைக்கப்பட்டு தேசியக்கொடி மற்றும் தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் கொடிகளும் ஏற்றப்பட்டன.
நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய மாவட்ட முகாமையாளர் சலீம் மௌலானா தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் 50 ஆண்டு கால சேவையும் அதனால் இளைஞர் யுவதிகள் தொழிற் பயிற்சி பெற்று திறமைகளை வளர்த்துக் கொண்டு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தகைமை பெற்ற மனித வளங்களாக உள்ளமை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
No comments: