News Just In

12/24/2021 06:37:00 AM

சாய்ந்தமருதில் நடைபெற்ற இவ்வாண்டுக்கான கலாசார இலக்கிய பெரு விழா!

கலாசார அலுவல்கள் திணைக்களம், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார பிரிவு மற்றும் கலாசார அதிகாரசபை ஆகியன இணைந்து நடாத்திய இவ்வாண்டுக்கான கலாசார இலக்கிய விழா நேற்று (23) வியாழக்கிழமை சாய்ந்தமருது கமு/கமு/அல் - ஹிலால் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச். ஷபீகாவின் ஒருங்கிணைப்பில், சாய்ந்தமருது கலாசார அதிகார சபையின் தலைவரும்,சாய்ந்தமருது பிரதேச செயலாளருமான எம்.எம். ஆசிக்கின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், மேலும் கௌரவ அதிதிகளாக பிரதேச செயலக கணக்காளர் என்.பி.எம். லரீப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட் மற்றும் விசேட அதிதிகளாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். றின்சான், சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய அதிபர் யூ.எல். நஸார் மற்றும் சிறப்பு அதிதிகளாக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல், நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். நளீர், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.ஏ.நஜீம், மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.எச்.எம்.பாஜித், கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஷ்ரப், பாடசாலை அதிபர்கள், கலாச்சார அதிகார சபையின் பொருளாளர் கலைஞர் எஸ்.எம். அஸ்வான் மௌலானா உட்பட பிராந்திய எழுத்தாளர்கள், பிரபல கலைஞர்கள், இலக்கியவாதிகள், கல்விமான்கள் எனப் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், ஏற்கனவே நடைபெற்ற இலக்கியப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்கள் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.

(நூருல் ஹுதா உமர்)








No comments: