News Just In

12/14/2021 10:44:00 AM

சீன உர கப்பலுக்கு கொடுப்பனவு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு


இரு தரப்பினருக்கும் நட்டம் ஏற்படாத வகையில், சீன உரத்திற்கான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நீதி அமைச்சர் அலி ஷப்ரி ஆகியோரால் அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய இந்த அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரிடம் வினவியபோது, நேற்று (13) கூடிய அமைச்சரவையில் இவ்வாறான அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

சீன சேதனப் பசளை தொகையைக் கொண்டுவந்த கப்பலுக்கு சுமார் 08 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவது தொடர்பாக இரு அமைச்சரவைப் பத்திரங்கள் நேற்று (13) மாலை கூடிய அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

No comments: