News Just In

12/14/2021 11:11:00 AM

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகளை தகவல் தொழில்நு ட்ப வசதிகளுடன் விரைவு படுத்தல் !



மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகளை தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன் விரைவு படுத்த அரசாங்க அதிபர் கே. கருணாகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இம்முறை இடம்பெற்ற தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டித் தொடரில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் விசேட பாராட்டு விருதினை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து கிளைத்தலைவர் களுக்கிடையிலான உற்பத்தித் திறன் மேம்பாட்டு மீளாய்வுக் கூட்டம் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே. கருணாகரன் தலைமையில் திங்களன்று 13.12.2021 மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது மாவட்ட செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகளை தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன் வினைத்திறன் மிக்கதாக வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசாங்க அதிபரினால் ஆலோசனை வழங்கப்பட்டது.

மாவட்ட செயலகத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை உற்பத்தித்திறன் எண்ணக்கரு செயற்பாடுகளினூடாக மேலும் மேம்படுத்துவதற்காக செயலக உத்தியோகத்தர்களுக்கு ஏற்கனவே விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தவிர உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரனின் தலைமையிலான குழு தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி துரித சேவைகளை வழங்கும் ஏனைய மாவட்ட செயலகங்களின் சிறந்த செயற்பாடுகளையும் அனுபவங்களையும் கள விஜயம் மூலம் பெற்று வந்து இதன்போது முன்னிலைப்படுத்தியது.

இவ்வாறு வழங்கப்பட்ட பயிற்சிகளின் அடிப்படையில், இருக்கும் மனித மற்றும் பௌதீக வளங்களை பயன்படுத்தி தகவல் தொழில்நுட்ப வசதிகளின் ஊடாக உச்சகட்ட வினைத்திறனான சேவைகளை வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது.

உற்பத்தித் திறன் மேம்பாட்டு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மீளாய்வுக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், பிரதம கணக்காளர் கே. ஜெகதீஸ்வரன், மாவட்ட செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

.எச்.ஹுஸைன்
 



No comments: