News Just In

12/31/2021 06:31:00 PM

'குண்டர்களே உறுப்பினரை வெளியேற்றுங்கள்' த.தே.கூ தவிசாளர் ஆத்திரம் ; செங்கலடி பிரதேச சபையில் அமைதியின்மை!

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் விசேட அமர்வில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது. மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று காலை மணியளவில் சபையின் தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் சி.சர்வானந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் அவர்களினால் வழங்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக குறித்த விசேட அமர்வு இன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

அவரின் பிரேரணைகளாக (செங்கலடி பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறைக்கு செல்லும் வீதிக்கு கிரவல் இடல் மற்றும் செங்கலடி மத்திய கல்லூரி முன்னும் பாடசாலை வளாகப்பகுதயிலும் வாகணங்கள் நிறுத்துவதை தடை செய்ய கோரியும்) எனினும் இன்றய சபை அமர்வில் குறித்த பிரேரணையை தொடரபில் விசேட கூட்டம் நடாத்த ஏற்பாடு செய்திருந்துத் உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் கலந்துகொண்டிருக்கவில்லை.

இதன் காரணமாக குறித்த பிரேரணைகள் தொடர்பாக சபையில் இன்று ஆராயப்படவில்லை. இதேவேளை இன்றைய அமர்வில் குறிப்பாக உரையாற்றிய பிரதேச சபையின் தவிசாளர் சி.சர்வாணந்தன் கருத்து தெரிவிக்கையில். எனது புகைப்படத்தை முகப்புத்தகத்தில் பதிவேற்றி உறுப்பினர் ஒருவர் இங்குளார் அவர் நான் சபைக்கு தவிசாளராக வந்த பின் என்னை இவ்வாறு முகப்புத்தகங்களுடாக இழிவு படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்.

இவர் இவ்வாறு செயற்படுவதால் இவருக்கு எதிராக ஒரு மாத காலம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளேன். இதற்கு சபையின் அனுமதி கேட்கின்றேன் எனவும் சபையில் தெரிவித்தார்.

குறிப்பாக முகப்புத்தகத்தில் பதிவிட்டதையும் பனர் பிரன்ட் மூலம் சபையில் காட்சிப்படுத்தியிருந்தார். இது தொடர்பாக தவிசாளர் உறுப்பினர்களிடம் தெரிவித்த போது இது தனி ஒருவர் சார்ந்து இருப்பதால் சபை உறுப்பினர்கள் இது தொடர்பாக கருத்து தெரிவிக் முடியாது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர் ந.மோகராஜன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் செங்கலடி பிரதேச சபையின் உப தவிசாளர் கா.இராமச்சந்திரன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர். ந.திருணாவுக்கரசு ஆகியோர் சபையில் உரையாற்றினர்.

இதே வேளை தவிசாளரின் அனுமதி இல்லாமல் தொலைபேசி உரையாடச் செல்ல முயன்றமை தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு எனத் தெரிவித்து புத்திசிகாமணி சசிகரன் அவர்களை சபையில் இருந்து வெளியேற்றுமாறு தவிசாளர் தெரிவித்தார்.

இதன் போது தெரிவித்த தவிசாளர் 'குண்டர்களே இவரை வெளியேற்றுங்கள்'.. 'குண்டர்களே இவரை வெளியேற்றுங்கள்'.. என தெரிவித்தவாறு குறித்த உறுப்பினரை ஒரு மதாகாலம் சபை நடவடிக்கையில் கலந்துகொள்ளாது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்து. இத்துடன் சபை கலைகின்றது என வெளியேறினார்.

தவிசாளர் வெளியேறியதன் பின் உறுப்பினர்களுக்கிடையே தவிசாளரின் வெளியேற்றம் தொடர்பில் சிறு அமைதியின்மை ஏற்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பெண் உறுப்பினர் நல்லையா சரஸ்வதி தெரிவிக்கையில் ஏற்கனவே தவிசாளரிடம் தொலைபேசி உரையாடல் தொடர்பில் உறுப்பினர் அனுமதி பெற்றிருந்தும் தவிசாளர் வேண்டும் என்று செயற்படுகிறார் எனவும். அவர்களின் சொந்தப்பிரச்சிணைக்காக சபை நடவடிக்கையை கலைக்கின்றர்.

இது சபையை அவமானப்படுத்தும் விடயம் எனவும் தெரிவித்தார். கௌரவ உறுப்பினரை அவமானப்படுத்தும் வகையில் செயற்படுகின்றார் எனவும் தெரிவித்தார்.

இதே வேளை உறுப்பினர் பு.சசிகரன் தெரிவிக்கையில் தவிசாளர் வேண்டும் என்று இவ்வாறு நடந்துகொண்டார்;. நான் எமது உள்ளுராட்சி பிராந்திய பணிப்பாளர் மணிவன்னன் ஐயா அவர்களுடன் தொலைபேசியில் உரையாடச்சென்றேன் என்றார்.

2020 ம் ஆண்டு முகப்புத்தக பதிவை இன்று பனரில் பிரின் எடுத்து வந்துள்ளார் எனவும் தெரிவித்தார்.

இதே வேளை இன்றைய விசேட சபை அமர்விற்கான பிரேரணைகளை வழங்கி சபை ஒன்று கூடகாரணமாகவிருந்த உறுப்பினர் வ.சுரேந்திரன் தலைமறைவாகியதால் சபை நடவடிக்கையில் குழப்பம் ஏற்பட்டதாகவும் உறுப்பினர் கருத்து தெரிவித்தவாறு கலைந்து சென்றனர்.

(செங்கலடி நிருபர்)














No comments: