News Just In

12/24/2021 04:27:00 PM

கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்ட பெண்ணின் இறுதிக் கிரியைகளில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு அனுதாபம்


ம ட்டக்களப்பில் கடந்த 20ஆம் திகதி கொடூரமான முறையில் வெட்டிக்கொல்லப்பட்ட இரு பிள்ளைகளின் தாயான தயாவதியின் இறுதிக் கிரியைகள் வியாழக்கிழமை மாலை (23.12.2021) அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது.

வர்த்தகரும் சமூக சேவகருமாகிய கலாநிதி கந்தையா செல்வராஜாவின் மனைவியின் இறுதிக் கிரியையில் அன்னாரின் உடலத்திற்கு அரசியல் பிரமுவர்கள், வர்த்தக சமூகத்தினர், லயன்ஸ் கழகம் றோட்டறிக் கழகம் ஆகியவற்றின் அங்கத்தவர்கள் நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலர் மலரஞ்சலி மற்றும் இறுதி மரியாதை செலுத்தினர்.

மட்டக்களப்பு மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் இராஜபுத்திரன் சாணக்கியன், மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், மட்டக்களப்பு வர்த்தக சங்கத் தலைவர் எம். செல்வராஜா, களுவாஞ்சிக்குடி வர்த்தக சங்கத் தலைவர் வி.ஆர். மகேந்திரன், மட்டக்களப்பு லயன்ஸ் கழக முன்னாள் தலைவர் எந்திரி ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் அஞ்சலி உரையாற்றினர்.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் இந்திரக்குமார் பிரசன்னா, லயன்ஸ் கழகத்தின் இலக்கம் 306 சி மாவட்ட முன்னாள் ஆளுனர்களான விக்கும்பிரிய வீரக்கொடி, திலக் பெரேரா, தற்போதைய இரண்டாம் உப ஆளுனர் இஸ்மத் ஹமீட் ஆகியோருடன் பிரதம ஆலோசகர் லயன் ஏ.செல்வேந்திரனும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

கொலைச் சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட 46 பவுண் தங்க ஆபரணங்கள் கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவான சிசிரி ஒளித் தொகுப்புக்கள் அடங்கிய விசிடி எனப்படும் வன்தட்டு போன்ற தடயப் பொருட்களை மீட்ட பொலிஸார் கைது செய்யப்பட்ட வேலைக்காரி மற்றும் அவளது தந்;தை ஆகிய இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (21.12.2021) ஆஜர்படுத்தியபோது சந்தேக நபர்களை எதிர்வரும் ஜனவரி 4ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.


 .எச்.ஹுஸைன் 

No comments: