News Just In

12/28/2021 07:18:00 PM

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன் - நஸீர் அஹமட் வீண் விவாதங்களை கைவிடவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேண்டுகோள்



ஏ.எச்.ஏ. ஹுஸைன்

“விவாதங்களை கைவிட்டு தீர்வுக்கான ஆக்கபூர்வமான பணிகளை இருவரும் முன்னெடுக்க வேண்டும்" என நாடாளுமன்ற உறுப்பினர்களான நஸீர் அஹமட் மற்றும் சாணக்கியனிடம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள பகிரங்க அறி கையில்,“அதியுயர் சபையான பாராளுமன்றத்தில் உத்தியோக பூர்வமாக நடக்கும்விவாதங்களின் பயனாகக் கூட எந்தத் தீர்வுகளும் கிடைப்பதாக தெரியவில்லை.இந்நிலையில் ஊடகங்களுக்கு முன்னால் நடாத்தப்படும் விவாதங்கள் மேலும் பிரிவினைகளை விரிவாக்குவதற்கு உதவுமே தவிர மக்களின் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வையும் தரப்போவதில்லை.

எனவே, விவாதங்களை தவிர்த்து, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுப்பதே சிறந்ததாகும்" 'மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கு காணிப் பிரச்சினை இருக்கிறதா? இல்லையா?' என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இப்பகிரங்க விவாதம் பல்வேறு வகையான எதிர்வினைகளை ஏற்கெனவே தோற்றுவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 10ம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் திரு. சாணக்கியன் அவர்கள், “முஸ்லிம்களின் காணப்பிரச்சினையை வைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நாடகமாடுகின்றனர்" என்ற கருத்தினைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு நஸீர் அஹமட் அவர்கள் சாணக்கியன் அவர்களுக்கு பகிரங்க கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். இந்தப் பின்னணியிலேயே இ ப்பகிரங்க விவாதம் ஏற்பாடாகியுள்ளது.

இலங்கையில் மிக நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கான காரணிகளில் காணிப் பங்கீடு தொடர்பான விடயம் முதன்மையானது. மட்டக்களப்பும் இதற்கு விதி விலக்கல்ல. நம் நாட்டில் சகல சமூகத்தினரும் காணிப் பிரச்சினைகளை எதிர் கொண்டேயுள்ளனர்.இப்பிரச்சினைகளின் வடிவமும், பின்னணியும், பாரதூரமும் இடத்துக்கிடம் வேறுபடலாம்.மட்டக்களப்பில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். முஸ்லிம்கள் கிட்டத்தட்ட 25 வீதம் என்கின்ற சிறுபான்மையாக உள்ளனர்.இருந்தாலும் அவர்கள் வாழும் பிரதேசங்களின் மொத்த நிலப்பரப்பு 2 வீதத்தை விடவும் குறைவாகவே உள்ளது என மாவட்டச் செயலக புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன.இம்மாவட்டத்தில் முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் காணிப்பிரச்சினையின் தீவிரத் தன்மையினை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இதனை யாரும் மறுக்க முடியாது.

இப்பிரச்சனைக்கு நீண்ட கால அரசியல் மற்றும் அரச நிர்வாக விடயங்கள் காரணமாக இருக்கின்றன. இவை அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவுமே தீர்க்கப்பட வேண்டும்.காணிப்பிரச்சினை என்கின்ற விடயம் தமிழ் முஸ்லிம் அரசியலில் மிக நீண்ட காலமாகவே பிரதான பேசு பொருளாக இருந்து வருகின்றது .


No comments: