News Just In

12/25/2021 12:38:00 PM

மட்டக்களப்பு நகரில் திரவப் பால் விற்பனை செய்யும் நிலையம் திறந்துவைப்பு






(மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)

வெளிநாட்டு பால்மா அருந்தும் மோகத்திலிருந்து விலகி மக்களை நாட்டில் உற்பத்தி செய்யும் திரவப்பாலை அருந்து வதற்கு ஊக்குவிக்கும் விஷேட திட்டங்களை கால்நடை வள பண்ணை மேம்பாட்டு பால் மற்றும் முட்டை தொடர்பான கைத்தொழில் இராஜாங்க அமைச்சு அமுல் நடாத்தி வரு கின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனைக்கமைய கால் நடை வள பண்ணை மேம்பாட்டு பால் மற்றும் முட்டை தொடர் பான கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத்தின் வழிகாட்டுதலில் இந்த திட்டம் நாடளாவிய ரீதியில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த விசேட திட்டத்தின் கீழ் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி தூய பசும்பால் விற்பனை நிலையங்களை ஆரம்பிக்க குறித்த ராஜாங்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது .

இந்த விஷேட திட்டத்திற்கு அமைய மட்டக்களப்பு நகரில் தூய பசும்பால்மற்றும் இயற்கை உணவு விற்பனை செய்யும் நிலை யம் ஒன்று கிழக்குமாகாண விவசாய கால்நடை உற்பத்தி மற் றும் மீன்பிடி மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சின் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா இன்று வைபவ ரீதியாக ஆரம் பித்து வைத்தார்.

கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் திருமதி உதய ராணி குகேந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் டாக் டர் ஏ .எம் பாசி மற்றும் அரச அதிகாரிகளும் ,கால்நடை உற் பத்தியாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கால்நடை விவசாய கால்நடை மற்றும் அமைச்சின் செயலாளர் திருமதி பத்மராஜா இங்கு கருத்து வெளியிடுகையில்;- பால் உற்பத்தியை அதிகரித்து மக்கள்அதிக விலை கொடுத்து பால்மா அருந்துவதை தவிர்த்து திரவ பால் அருந்துவதை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவித்தார்

இந்தத் திட்டம் நகர பகுதிகளிலும் மற்றும் நகரை அண்டிய பகுதி களிலும் விரைவாக ஆரம்பித்து வைக்கப்படும் என்றும் இதற்கு அரசாங்கத்தின் உதவி திட்டத்தில் நிதி உதவிகள் வழங் கப்படும் என்றும் மாகாண அமைச்சின் செயலாளர் திருமதி கலாநிதி பத்ம நாதன் தெரிவித்தார்.




No comments: