News Just In

12/21/2021 12:58:00 PM

இரண்டாம் மொழி சிங்கள பாட நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு




அரசகருமமொழிக் கல்விதிணைக்களத்தினால்பாராளுமன்றத்தில்2007, 26ஆம் இலக்கசட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட மொழி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்
அதிகாரத்துக்கு அமைய அரச அலுவலகர்களுக்குநடாத்தப்படும் சிங்கள, தமிழ்மற்றும்ஆங்கிலமொழிக்கற்கைநெறிகள்அரசாங்கசுற்றறிக்கைகளுக்கமைவாக தமிழ் பேசும் அரச அலுவலகர்களுக்கு சிங்கள மொழிப் பாடநெறியும்,சிங்கள மொழி பேசும் அரச அலுவலகர்களுக்கு
தமிழ்மொழிப்பாடநெறியும்அறிமுகப்படுத்தப்பட்டுநடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் அம்பாறை,மல்வத்தை கமநல சேவைகள் மத்திய நிலையத்தின்அரச உத்தியோகத்தர்கள்48 பேருக்கு150 மணித்தியாலம் கொண்ட இரண்டாம் மொழி சிங்கள பாடநெறி பயிற்சி நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மல்வத்தைகமநல சேவைகள் மத்திய நிலையத்தின் கேட்போர் கூடத்தில் கமநல சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரசன்ன சஞ்சீவ அவர்களின்
தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு விஷேட அதிதியாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ஜீ.எல்.அ. சாமினி சோமதாச அவர்களும் சிறப்பு அதிதிகளாக திணைக்களத்தின் தலைமை பெரும்பாக உத்தியோகத்தர் ஜ.எல்.ஏ. கார்லிக், நிலையத்தின் விவசாய போதனாசிரியர் எம்.ரி.ஏ.கரீம்
சிங்கள பாட நெறியின் வளவாளர் ஏ.எம்.எம்.முஜீப்
ஆகியோர் கலந்து கொண்டனர்.

(றாசிக் நபாயிஸ்)




No comments: