கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டப் பாடசாலைகளில் கல்வி கற்று வரும் தரம் ஐந்து மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினால் நடாத்தப்பட்ட மூன்று முன்னோடி பரீட்சை பெறுபேறுகளின் படி இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சை பெறுபேற்றில் 70 க்கு குறைவாக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களையும், 130 புள்ளிகளுக்கு கூடுதலாகவும் வெட்டுப் புள்ளிக்கு குறைவாகவும் பெற்றுக் கொண்ட மாணவர்களையும் இனங்கண்டு அவர்களுக்கு பரிகார செயற்பாடுகளை மேற்கொள்ள இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் தரம் ஐந்து புலமைப் பரிசில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வொன்று மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளரும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளருமான வீ.ரீ.அஜ்மீர் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். றமீஸ், ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ.ஜாபிர் கரீம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
எச்.எம்.எம்.பர்ஸான்
No comments: