டிசம்பர் 16 முதல் டிச.31 வரை அமுலுக்கு வரும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தனவினால்(Asela Gunawardena) வெளியிடப்பட்டுள்ளன. வழிகாட்டுதல்களின்படி, இறுதிச் சடங்கில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில், விழா மண்டபத்தின் கொள்ளளவில் 50% பேர் திருமணங்களில் கலந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
நவம்பர் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களில் திருமணங்களில் மதுபானம் பயன்படுத்த அனுமதி இல்லை என்று கூறப்பட்டாலும், இம்முறை வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களில் அது குறிப்பிடப்படவில்லை.
No comments: