எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வேலைத்திட்டங்களின் கீழ் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
வீதி விதிகளுக்கு அமைவாக, கவனமாக வாகனத்தை செலுத்துவது மிகவும் அவசியமானது எனவும், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் இது தொடர்பில் இலங்கை பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாறான அனைத்து நடவடிக்கைகளும் இரவு பகலாக மேற்கொள்ளப்படுவதாகவும், அதிவேக மற்றும் கவனக்குறைவாக வீதி விதிகளை மீறும் சாரதிகள் கைது செய்யப்படுவதாகவும், அந்த சாரதிகள் அனைவருக்கும் எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments: