News Just In

12/15/2021 12:45:00 PM

பட்டப்பகலில் யாழில் நடந்த பயங்கரம்!


யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இளைஞன் ஒருவரைக் கும்பல் ஒன்று துரத்தித் துரத்தி வாளினால் வெட்டியுள்ளது. சன நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் குறித்த பகுதியில் இன்றைய தினம் பகல் 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். நகர் பகுதியை நோக்கிக் குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்த நால்வர் இளைஞனை பரமேஸ்வர சந்தியில் வழி மறித்து கடுமையாக வாள் வெட்டினை மேற்கொண்டனர்.

கும்பலின் தாக்குதலிலிருந்து தப்பித்து, பல்கலைக்கழகம் பக்கமாக இளைஞன் தப்பியோடிய போதும் , துரத்தித் துரத்தி வெட்டப்பட்டுள்ளார். வாள் வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

No comments: