News Just In

12/14/2021 05:56:00 PM

சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு!



சிறுவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றது. சி.பி.எம். நிறுவனத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு உள நல உதவி நிலையத்தில் நடைபெற்ற இச் செயலமர்வில், சிறுவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

எதிர் காலத்தில் சிறுவர்கள் மற்றும் விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வி மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஊடகவியலாளர்கள் கவனம் செலுத்த வேண்டிய முறைகள் தொடர்பாக செயலமர்வில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.குறித்த செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எச்.எம்.எம்.பர்ஸான்




No comments: