News Just In

12/23/2021 06:48:00 AM

அந்நிய செலாவணியை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் வகுத்துள்ள திட்டம்!

அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ளும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்வதற்காக பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரிஸ் (G. L. Peiris) தெரிவித்தார்.

அது தொடர்பில் அண்மையில் கொரிய வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதுடன் அந்த நாட்டில் இலங்கையருக்கான தொழில் வாய்ப்பை அதிகரித்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிட்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் கொரோனா சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கவேண்டிய 4.7 பில்லியன் வருமானத்தை நாடு இழந்துள்ளது.

மீண்டும் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதுடன் இன்னும் சில மாதங்களில் அதன் மூலமான வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வாய்ப்புகள் கிட்டுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேசிய லொத்தர் சபையின் ஏற்பாட்டில் லொத்தர் சீட்டிழுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலைகளை கையளிக்கும் வைபவம் வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்றது.

அந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments: