News Just In

12/23/2021 06:57:00 AM

மருத்துவர்கள் நியமனத்தில் அரசியல் ரீதியாக ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் அமைச்சுப் பதவியை துறப்பதாக கெஹலிய ரம்புக்வெல்ல அறிவிப்பு!

மருத்துவர்கள் நியமனத்தில் அரசியல் ரீதியாக ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella)தெரிவித்துள்ளார்.

உள்ளகரீதியாக மருத்துவர் நியமனத்தில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடு தழுவிய ரீதியில் மூன்றாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

ஏழு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை தொடரும் எனவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எந்தவொரு சட்ட அடிப்படையும் இன்றி அரசாங்க மருத்துவ அதிகாரிகளால் இவ்வாறான பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க முடியாது என அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் சிரேஷ்ட உறுப்பினர் மருத்துவர் பிரியந்த அத்தபத்து (Priyantha Atapattu)சுட்டிக்காட்டியுள்ளார். நியமனங்கள் அல்லது இடமாற்றங்களில் கையொப்பமிடுவதற்கு GMOA க்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்றும் அவர் கூறினார்.

No comments: