News Just In

12/25/2021 01:22:00 PM

சமுர்த்தி சிறுவர் கழக நூலகம் திறப்பு




எஸ்.எம்.எம்.முர்ஷித்
சௌபாக்கியா வேலைத்திட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் வாசிப்பு திறனை அதிகரிக்கும் நோக்கில் சிறுவர் கழக பாடசாலையில் நூலகம் ஆரம்பித்து வைக்கும் வைபவம் இடம்பெற்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தில் வானவில் சமுர்த்தி சிறுவர் கழக நூலகம் திறந்து வைக்கப்பட்டது.

ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலய அதிபர் எம்.எல்.எம்.பைசல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.அஸீஸ்;, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.யூ.எச்.ஜெஸீமா, எம்.யூ.ஸியாத், எம்.ஏ.எம்.சாஜகான், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.எம்.இம்தியாஸ், பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வாசிப்பு திறனை அதிகரிக்கும் நோக்கில் சமுர்த்தி திணைக்களத்தினால் இருபத்தையாயிரம் ரூபாய் பெறுமதியான புத்தகங்கள் பிரதேச செயலாளர் வீ.தவராஜாவினால் பாடசாலை நிருவாகத்திடம் கையளிக்கப்பட்டு வாசிப்பு நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.








No comments: