News Just In

12/07/2021 05:59:00 PM

வீட்டுத் தோட்ட விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்குரிய விதைகள் வழங்கி வைக்கப்பட்டன!


தெரிவு செய்யப்பட்ட வீட்டுத் தோட்ட விவசாயிகள் 300 பேருக்கு சௌபாக்யா திட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கைக்குரிய விதைகள் வழங்கி வைக்கப்பட்டன.ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான நஸீர் அஹமட் தலைமையில் சனிக்கிழமை 04.12.2021 நிகழ்வு நடைபெற்றது.

மேலும் அந்நிகழ்வில் 37 பயனாளிகளுக்கு உப உணவுச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக உழுந்து, பயறு விதைகளும் 50 வீத மானிய அடிப்படையில் நகர தோட்ட அபிவிருத்திக்காக 25 பயனாளிகளுக்கு தலா 100 கிலோகிராம் கூட்டுப் பசளை, தலா 50 நாற்று நடும் பொதிகள், தலா 6 வகையான மரக்கறி விதைப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் அன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வைத்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் 25 பேருக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில் தெங்கு அபிவிருத்திச் சபையின் மட்டக்களப்புப் பிராந்திய முகாமையாளர் பிறேமினி ரவிராஜ், மட்டக்களப்பு விவசாய உதவிப் பணிப்பாளர் எஸ். சித்திரவேல், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி.நிஹாறா, திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ. சிஹானா, ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவின் விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதாஷிரீன் மற்றும் பல விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

.எச்.ஹுஸைன்



hussein abdul

No comments: