சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம் எச் கே சனூஸ் காரியப்பரின் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டமும் கண்காட்சியும் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம் ஐ எம் எஸ் இர்ஷாத், தாதியர் பரிபாலகர் பீ.எம்.நசுறுதீன் உட்பட வைத்திய அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள் குறித்த கண்காட்சியும் இடம்பெற்றது
UMAR LEBBE NOORUL HUTHA UMAR
No comments: