News Just In

11/14/2021 12:52:00 PM

சாய்ந்தமருதில் சுற்றாடலை பாதுகாக்க தவறிய நான்கு வீடுகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை !


கல்முனை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் நவம்பர் 11 முதல் 13 வரை நடைபெற்ற தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போது 1507 வீடுகள் மற்றும் வளவுகளில் 48 வீடுகள் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களாக கண்டறியப்பட்டு குறுகிய காலத்தில் அவற்றை சரிசெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை (Red Notice) அறிவிப்புகள் வழங்கப்பட்டதோடு நான்கு வீடுகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். யூ.எல்.எம்.நியாஸ் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், அலட்சியமாக செயற்படுவது எதிர்வரும் வாரங்களில் டெங்கு காய்ச்சலுக்கு வழிவகுப்பதோடு எமது உறவினர்களின் உயிருக்கும் ஆபத்தையும் ஏற்படுத்தும் செயற்பாடாகும். எனவே எதிர்வரும் நாட்களிலும் இந்த பரிசீலனையை தொடர தீர்மாணிக்கப்பட்டிருப்பதால் தமது சுற்றுப்புறச்சூழலை சுத்தம் செய்யாதவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்பதையும் மனவருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.




UMAR LEBBE NOORUL HUTHA UMAR

No comments: