News Just In

11/21/2021 09:38:00 AM

"நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளும், சவால்களும்" நூல் வெளியீடு!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம். அஸ்லம் சஜா எழுதிய "நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளும், சவால்களும்" எனும் தலைப்பிலான நூல் வெளியீட்டு நிகழ்வு சாய்ந்தமருது கமு/கமு/அல்- ஹிலால் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் எம்.ஐ. முஹம்மட் சதாத் தலைமையில் நேற்று சனிக்கிழமை (20) மாலை இடம்பெற்றது.

சாய்ந்தமருது இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான (ஜெனீவா) முன்னாள் நிரந்தரப் பிரதிநிதியும், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.ஏ.அஸீஸ் கலந்து கொண்டு பிரதம உரை நிகழ்த்தினார். நூலின் ஆய்வுரையை பேஜஸ் பதிப்பக பிரதானியும், இலக்கிய விமர்சகருமான சிராஜ் மசூர் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் (கலாநிதி) றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ, ஜெகதீஸனும் விசேட அதிதியாக கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் கலந்து கொண்டார். மேலும் சம்மாந்துறை பிரதேச சபை தலைவர் ஏ.எம். நௌசாத், இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர் ஏ.எல்.எம். சலீம், உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள், சாய்ந்தமருது ஜும்மாப்பள்ளிவாசல் தலைவர் ஏ. ஹிபதுல் கரீம், கல்முனை முஹையதீன் ஜும்மாப்பள்ளிவாசல் தலைவர் டாக்டர் ஏ.எம். அஸீஸ், உலமாக்கள், சட்டத்தரணிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், வலயக்கல்வி அழுவலகங்களின் உத்தியோகத்தர்கள், கல்விமான்கள், இலக்கியவாதிகள், சமூக நல ஆர்வலர்கள், சாய்ந்தமருது இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் செயற்பாட்டாளர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நூருல் ஹுதா உமர்





No comments: