News Just In

11/23/2021 03:18:00 PM

" இணைய வழி குற்றங்களை புரிந்து கொள்ளலும், பதின்ம வயதினர் எதிர்நோக்கும் சவால்களும்" விஷேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

இணையத்தளத்தில் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளல் இணையத்தளம் பிள்ளைகளின் அறிவு, திறமை மற்றும் மனப்பாங்கை வளர்ப்பதற்குக் காரணமாகின்ற போதிலும் பிள்ளைகள் இணையத் தளத்தைப் பயன்படுத்தும் போது அதில் உலாவரும் துஷ்பிரயோகம் செய்வோரின் பிடியில் சிக்குகின்றமை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றமை துரதிஷ்டவசமான சம்பவங்களின் மூலம் தெரிய வருகின்றது. எனும் கருப்பொருளின் பாடசாலை மாணவர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி இறக்காமம் பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.சபறுல் ஹஸீனாவின் ஏற்பாட்டில் இறக்காமம் சது/அல் - அஷ்ரப் தேசிய பாடசாலையில் திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச்.வஹாப் பிரதம வளவாளராக பங்கேற்று விஷேட விழிப்புணர்வு அமர்வை நடத்தி வைத்தார். முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம்.இம்டாட், பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர் எஸ். றிஸ்மியா ஜஹான் ஆகியோர் கலந்து கொண்டதோடு பாதுகாப்பான இணையப் பாவனையும் மாணவர்களின் வகிபாகமும் தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வை நடத்தினர்.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தினால் மாணவர்கள், பெற்றேர் மற்றும் முதியவர்களான சமுதாயத்தினருக்கு தனித்தனியாக விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டங்களை பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் நடாத்தி வருகின்றது. அதற்கமைய இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் பாடசாலை மாணவர்களை விழிப்புணர்வூட்டும் இந்நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மாளிகைக்காடு நிருபர்





No comments: