News Just In

11/12/2021 07:11:00 PM

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர்!

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் கொழும்பில் நேற்று (11) முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, அரசியல், அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவமிக்க விடயங்கள்குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது இந்திய மத்திய அரசின் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில், உயர்ஸ்தானிகர் கவனம் செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

No comments: