News Just In

9/04/2021 03:43:00 PM

கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு- விலையும் உயர்வு...!!


சந்தையில் கோதுமை மாவின் விலை உயர்ந்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பில் நாம் முன்னெடுத்து ஆய்வு நடவடிக்கையில் சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவது தெரியவந்தது.

மேலும், அத்தியாவசியப் பொருட்களை பதுக்குதல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க அவசரகால விதிமுறைகளை பிரகடப்படுத்தப்பட்டதையடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை தொடர்ந்தும் சோதனைகளை முன்னெடுத்துவருகிறது.

இதுவரையில் மேற்கொண்ட சோதனையில் 32,597 மெட்ரிக் டன் சீனி மற்றும் 643.5 மெட்ரிக் டன் நெல் மீட்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் வவுனியா கோவில்குளம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், அரிசி மற்றும் கோதுமை மாவை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டது.

No comments: