News Just In

9/04/2021 03:49:00 PM

நிந்தவூரில் சேதன பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பமானது...!!


(மாளிகைக்காடு நிருபர்)
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக நாடு தழுவிய ரீதியில் விவசாயத் துறையில் முழுமையாக சேதன உரப் பயன்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் சேதன பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச செயலக எல்லைக் குட்பட்ட பகுதிகளில் விவசாயிகளினால் சேதன பசளை தயாரிக்கும் முயற்சி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த செயற்பாடுகளை நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் தலைமையிலான பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சுல்பிகார், சமூர்த்தி முகாமையாளர், கிராம உத்தியோகத்தர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர் அடங்கிய குழு மேற்கொண்டு சேதனை உர உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கான மேலதிக ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.





No comments: