News Just In

8/01/2021 01:10:00 PM

கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளர் நகர அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளருமாகிய இரா.நெடுஞ்செழியன் நகர அபிவிருத்தி அமைச்சின் ‘பணிப்பாளர் நாயகமாக’ பொதுச்சேவை ஆணைக்குழுவின் 2021.05.11ஆம் திகதிய தீர்மானத்திற்கமைய அரச பொது நிர்வாக அமைச்சினால் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

1994.01.17இல் இலங்கை திட்டமிடல் சேவையில் இணைந்து கொண்டு வாழைச்சேனை> செங்கலடி பிரதேச செயலக பிரிவுகளில் உதவி திட்டமிடல் பணிப்பாளராகவும்> மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி ஆணையாளராகவும் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராகவும் கடமையாற்றி கடந்த 3 வருடங்களாக கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.

எதிர்வரும் 2021.08.02 முதல் நகர அபிவிருத்தி அமைச்சு கொழும்பில் பணிப்பாளர் நாயகமாக கடமையைப் பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பொது முகாமையாளராக கிழக்கு மாகாண ஆளுனரால் நியமிக்கப்பட்ட பின் சிறந்த செயற்திறனுக்கான விருதினை கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை கடந்த 2020.02.28இல் ஜனாதிபதியிடம் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் பெற்றுக ;கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பொருளியல் சிறப்புக் கலைப்பட்டதாரியான இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் 3 வருடங்கள் உதவி விரிவுரையாளராகவும் (பொருளியல்) கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இசைநடனக் கல்லூரியில் கணக்காய்வுக்குழு தலைவராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் மேலதிக பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு கொரியா, தாய்லாந்து, மலேசியா, பிலிப்பைன்ஸ், சீனா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளிக்கு விஜயம் செய்துள்ளமை முக்கியமானதாகும்.

இவர் தனது முதுமாணிப்பட்டப் பின்படிப்பை (பொருளியல்) காமராஜ பல்கலைக்கழகத்திலும், பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பூர்த்தி செய்துள்ளதுடன் 2017ல் இலங்கை திட்டமிடல் சேவையில் விசேட தரத்தைப் பெற்றுக் கொண்டு இலங்கைத் திட்டமிடல் சேவையில் 27 வருட கால சேவையை பூர்த்தி செய்துள்ளார்.

No comments: