News Just In

8/03/2021 12:47:00 PM

காரைதீவு, சாய்ந்தமருதில் 84 வீதமானோர், திருக்கோவிலில் 88 வீதமானோர் தடுப்பூசியினை பெற்றுக் கொண்டனர்...!!


(நூருல் ஹுதா உமர்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் தலைமையில் கொவிட்-19 கொரோணா தடுப்பூசி நடவடிக்கைகள் கடந்த 06 தினங்களாக நடைபெற்று இதுவரை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அலுவலக பிரிவில் 13,000 பொதுமக்கள் தடுப்பூசியினை பெற்றுள்ளனர்.

நடமாடும் தடுப்பூசி நடவடிக்கைகளும் சுகாதார உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு வீட்டில் தங்கி இருப்பவர்களுக்கான மற்றும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பவர்களுக்கான தடுப்பூசிகளும் அவர்களுடைய வீடுகளுக்கு சென்று பொதுச் சுகாதார மாதுக்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட 13 சுகாதார பிரிவுகளிலும் இதுவரை 180304 பேர் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளதுடன் சாய்ந்தமருதில் 84%, திருக்கோவிலில் 88%, காரைதீவு 84%, ஆலையடிவேம்பு 87% உட்பட சகல பிரிவுகளிலுமாக மொத்தம் 76 சதவீதமானோர் கல்முனை பிராந்தியத்தில் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.





No comments: