News Just In

7/08/2021 03:10:00 PM

விவசாயிகள் விடயத்தில் அரசியல் தலையீடு- கிழக்கு ஆளுநர் அனுராதா ஜகம்பத் குற்றசாட்டு!!


விவசாயிகளை பிழையாக நடத்துவதற்கு அரசியல் தலையீடு இருக்கின்றது இதனால் தான் விவசாயிகள் இன்று சேதனை பசளையை வேண்டாம் என்று கூறிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரசாயன பசளையின் பாதிப்பு காரணமாகதான் விவசாயிகள் இன்று வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் சேதனப் பசளை தொடர்பாக விவசாயிகள் மத்தியில் அதனுடைய நன்மை தீமை இதுவரைக்கும் சென்றடையவில்லை.

இன்று அரிசியை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது தற்போது விவசாயிகள் கூட இதில் அதிர்ச்சி அடைந்த நிலையில் காணப்படுகின்றனர் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

இரசாயன பசளை மூலமாக விவசாயம் செய்து வந்தவர்கள் புரிந்து கொண்டால் இன்று வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டிருக்காது முதலில் நாங்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

இரசாயனப் பசளையா அல்லது சேதன பசளையா என்பது பிரச்சனை இல்லை, மொத்தமாக எமது நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தியை எவ்வாறு அடைய முடியும் என்பதை பார்க்க வேண்டும்.

எமது ஜனாதிபதியின் திட்டம் ஒரு புது திட்டமானது ஆகவே நாங்கள் சிங்களம் தமிழ் முஸ்லிம் என்பதற்கு அப்பால் எங்களுக்கு பொருந்தக்கூடிய பசளை முறையை உருவாக்க வேண்டும்.

எமது நாட்டின் பொருளாதாரத்தை உயர்வடையச் செய்கின்றவர்கள் விவசாயிகள் ஆனால் இன்றைய நாளில் அதிக அளவு நஷ்ட்டத்தில் இருப்பவர்களும் விவசாயிகளாகதான் இருக்கின்றார்கள் இதற்கான காரணம் இராசயன பசளை முறைமையே.

இரசாயன பசளை விவசாயிகளுக்கு இனாமாக வழங்கப்பட்டாலும் அவர்களுடைய வாழ்வாதாரம் உயர்வடைய வில்லையே, தற்போது சேதனை பசளை முறைமையை ஆரம்பித்து இருக்கின்றோம் ஆகவே விவசாயிகள் உணரவேண்டும் எமது நாட்டுக்கு சிறந்தது சேதனப் பசளை என்பதை.

இந்த சேதனப் பசளையின் நன்மை தீமை தெரியாதவர்கள் தான் இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றார்கள் அவர்களை நாங்கள் தெளிவுபடுத்த வேண்டும் இன்று விவசாயிகள் ஏமாற்றப்பட்டு கொண்டு வருகின்றனர்.

விவசாயிகள் சேதனப் பசளை உற்பத்தி செய்வார்களாக இருந்தால் அரசாங்கம் அவர்களுக்கு மானியமாக பணம் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றது அதற்கு அவர்கள் முன்வருவார்கள் என நம்புகின்றேன் என்றார்.

No comments: