News Just In

7/16/2021 07:24:00 PM

மட்டக்களப்பு- வாகரைப் பிரதேசத்தில் வீட்டிலிருந்து பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாணவர்கள் தொடர்பான களஆய்வு...!!


மட்டக்களப்பு- வாகரைப் பிரதேசத்திலுள்ள பால்சேனை தமிழ் மகா வித்தியாலயத்தில், கல்வி பயிலும் 48 உயர்தர கலைப்பிரிவு மாணவர்களையும் அவர்தம் பெற்றோர்களையும் சந்தித்தல் மற்றும் மாதாந்த அறிக்கையிடல் தொடர்பான செய்ற்திட்டம் வித்தியாலய முதல்வர் எம்.நவரெட்ணராஜா தலைமையில் மாங்கேணி முதல் கதிரவெளி வரை இடம்பெற்றது.

வித்தியாலயத்தின் பிரதி அதிபர் த.உதயகுமார் மற்றும் உயர்தரத்துக்கும், கல்வி அபிவிருத்திக்கும் பொறுப்பான ஆசிரியர் திரு எ.த.ஜெயரஞ்சித் ஆகியார் இணைந்து இக் களவிஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இவ்விஜயத்தின் போது மாணவர்களின் உயர் தரத்துக்கான நேரலை வகுப்பு மற்றும் நேரலை பரீட்சை நடைமுறை, கற்றற் சூழல், பரீட்சைத் திணைக்கள இறுதிப்பரீட்சை, சிமாட்போன் பாவனை, கற்றல் சாதனங்கள், நேரசூசிகை, மாணவர்களின் பாதுகாப்பு போன்றன தொடர்பாகவும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் மாணவர்கள் கற்பதற்கு ஆலோசனையும் வழிகாட்டலும் வழங்கப்பட்டன.

மாங்கேணி, பனிச்சங்கேணி, சல்லித்தீவு, வாகரை, வம்மிவட்டவான், பால்சேனை, கதிரவெளி முதலிய எட்டு இடங்களிலும் இடம்பெற்ற இக்கலத்துரையாடல் சமூக இடைவெளிகளைப் பேணி பெற்றோர் பாதுகாவலரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது மாணவர்களின் குறைநிறைகள் கேட்டறியப்பட்டு உடனடித் தீர்வுகளும் வழங்கப்பட்டன.

அத்துடன் வறுமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த சில மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆசிரியர்களின் அனுசரணையில் உலர் உணவுப்பொதிகளும் கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன. கொரோனா தொற்று ஏற்பட்ட இக்காலகட்டத்திலும் கல்குடா கல்வி வலைய பாடசாலைகளில் பால்சேனைப் பாடசாலையின் உயர்தரத்து அனைத்து மாணவர்களும் தத்தம் பாடத்துடனும் தத்தம் ஆசிரியர்களுடன் இயங்கு நிலையில் தொடர்கற்றலில் ஈடபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







No comments: