News Just In

7/16/2021 03:53:00 PM

மட்டக்களப்பு- திருப்பெருந்துறை அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய பிரதிஸ்டா கும்பாவிசேகம்...!!


(வரதன்)
இராமாயண காவியத்தில் இராமனுக்கு மிகவும் விஸ்வாசமான ஒருவனாக விளங்கும் வாயு மைந்தனான ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானை இந்துமக்கள் விரும்பி வழிபடுவதுண்டு . மட்டக்களப்பு திருப்பெருந்துறை அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தின் பிரதிஸ்டா அஸ்டபந்தன நவகுண்ட கும்பாவிசேகம் இன்று காலை நடைபெற்றது. கடந்த 12.07.2021 அன்று திங்கட்கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமான இவ் உற்சவம் நேற்று 15.07.2021 அன்று எண்ணெய் காப்பு சாத்தும் உற்வசம் நடைபெற்று இன்று வெள்ளிக்கிழமை சுபநேரத்தில் மகாகும்பாவிசேகம் இடம்பெற்றது.

தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்ற இக் கும்பாவிசேக கிரியாகால நிகழ்வுகள் ஆலய பிரதம குரு அனுமந்ததாசன் கனகராசா அருவளவன் தலைமையில் இடம்பெற்றது.ஆனித்திங்கள் 28ம் நாள் 12.07.2021 அன்று கும்பாவிசேக குருமார்களை அழைத்துவருதலுடன் ஆரம்பமாகி அடுத்த நாள் தன்வந்தரி ஹோமம் யந்திர பூஜை என்பனவும் 14.07.2021 அன்று நந்தி கொடி ஏற்றல் தீபாராதனை என்பனவும் நேற்று காலை விநாயகர் வழிபாடு மற்றும் எண்ணை காப்பு சாத்துதல் போன்ற கிரியையகள் தொடர்ச்சியாக இடம்பெற்றன.

இன்று காலை காலை 5 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி காலை 8.15 முதல் 10.08 வலையுள்ள சுபமுகூர்த்த வேளையில் ஸ்ரீஆஞ்சநேயப்பெருமானுக்கு மகா கும்பாவிசேகம் நடைபெற்றது. இக் கும்பாவிசேக பணிகளை மூர்த்திய சிவாச்சாரியர்கள் சிறப்பு குருமார் என்போர் இணைந்து நடத்திவைத்தனர். கும்பாபிசேகத்தை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு வசந்த மண்டப பூஜையின் பின் ஆஞ்சநேயர் வீதியுலா வருதல் நடைபெறும். மேலும் கும்பாபிசேக்த்தை தொடர்ந்து மண்டலாபிசேக பூஜைகள் நடைபெற்று 27.07.2021 அன்று நவோத்ரா சங்காபிசேகத்துடன் இவ் உற்சவம் இனிதே முடிவுறும்.கிழக்க மாகாணத்தில் முதலாவது பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயம் என்பது இங்கு குறிப்பிடதக்க விசேட அம்சமாகும்.













No comments: