News Just In

7/22/2021 10:51:00 PM

கந்தளாய் கல்வி வலயத்தை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு டெப் வழங்கி வைக்கும் நிகழ்வின் முதல்கட்ட நிகழ்வு!!


(எப்.முபாரக்)
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்தும் நோக்கில் டெப் வழங்கப்படும் வேலைத்திட்டத்திற்கமைய திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் கல்வி வலயத்தை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு டெப் வழங்கி வைக்கும் நிகழ்வின் முதல்கட்ட நிகழ்வு இன்று(22) கந்தளாய் மத்திய மகா வித்தியாலயத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான கபில நுவன் அத்துக்கோரல தலைமையில் நடைபெற்றது.

இதன்போது 366 டெப் கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன. மாவட்டத்தின் ஏனைய கல்வி வலயங்களுக்கும் டெப் கருவிகள் அடுத்த கட்டத்தில் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இதன் மூலம் மாணவர்கள் தமது தொலைதூர கல்வியை மேற்கொள்ள ஏதுவாக அமைவதாகவும் தொடரான கற்றலுக்கு உந்து சக்தியாக அமையும் என்றும் வழங்கப்பட்ட கருவிகளை உரிய முறையில் பயன்படுத்தி சிறந்த தலைவர்களாக வர முயற்சிக்குமாறு இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள, கல்வித்திணைக்கள அதிகாரிகள்,அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.




No comments: