காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீரின் தலைமையில் நடமாடும் தடுப்பூசி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த டாக்டர் தஸ்லிமா வஸீர், வீட்டில் இருந்து தடுப்பூசி மையங்களுக்கு வர முடியாதவர்கள் அந்தந்த பகுதி பொதுச்சுகாதார மாதுகளிடமோ அல்லது பொது சுகாதார உத்தியோகத்தர்களிடமோ அவர்களின் பெயர்களை பதிவு செய்து வீட்டிலேயே தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும். என்றும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பகுதியில் 75% மக்கள் ஏற்கனவே தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டனர் என்றார்.
சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர் அவர்களின் ஆலோசனைக்கு அமைய வீட்டிலிருந்து வரமுடியாதவர்களுக்கு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் வீடுகளுக்கு சென்று கொவிட்-19 தடுப்பூசிகளை நேற்று வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: