News Just In

7/07/2021 11:15:00 PM

மட்டக்களப்பு- ஓட்டமாவடியில் சமூர்த்தி திணைக்களத்தினால் சிப்தொர புலமைப் பரிசில் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு!!


(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
ஓட்டமாவடி பிரதேச செயலக சமூர்த்தி திணைக்களத்தினால் சிப்தொர புலமைப் பரிசில் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செயலக சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எம்.ஐ.அஸீஸ், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம்.சாஜஹான், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.நியாஸ், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்

ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி கொடுப்பனவினை பெறும் குடும்பங்களில் உயர்தர கல்வியை கற்கும் 122 மாணவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக ஆயிரத்து ஐநூறு (1500) ரூபாய் வீதம் பத்து மாத கொடுப்பனவாக பதினையாயிரம் (15000) ரூபாய் வழங்கி வைக்கப்பட்டதாக பிரதேச செயலாளர் வீ.தவராஜா தெரிவித்தார்.

உயர்தர கல்வியை கற்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு சிப்தொர புலமைப் பரிசில் திட்டத்தின் மூலம் நிதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் மாணவர்கள் உயர்தர கல்வியை பூர்த்தி செய்யும் வரை கல்வி கற்க வேண்டும். இடையில் விடும் பட்சத்தில் சிப்தொர கொடுப்பனவு மாத்திரம் அல்ல சமுர்த்தி முத்திரை கொடுப்பனவும் நிறுத்தப்படும் என்றும் பிரதேச செயலாளர் வீ.தவராஜா தெரிவித்தார்.









No comments: