News Just In

7/19/2021 06:33:00 AM

விவசாயிகளுக்கு தேவையான உரத்தை தட்டுப்பாடின்றி பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை...!!


நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு தேவையான உரத்தை தட்டுப்பாடின்றி பெற்றுக்கொடுப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாவட்டங்களுக்குத் தேவையான உரத்தை விநியோகிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக திணைக்கள ஆணையாளர் ரசித்த ஹேமஜித் சில்வா எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

குறித்த உரத்தொகையானது, கமநல சேவை மத்திய நிலையங்களின் ஊடாக விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

அதேநேரம், மலர் செய்கைக்கு இரசாயன உரம் மற்றும் இரசாயன திரவியங்கள் அவசியமாயின், விவசாய அமைச்சின் நேரடி கண்காணிப்பின் கீழ் அவற்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

உரிய தேவைக்குரிய விவசாயிகளுக்கு மாத்திரம் இறக்குமதி செய்யப்படும் உரம் வழங்கப்படும்.

இந்தவிடயம் தொடர்பில் விவசாய திணைக்களம் தொடர்ந்தும் ஆய்வுகளையும், கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றது.

இறக்குமதி செய்யக்கூடிய இரசாயன திரவியங்கள் தொடர்பில், விரைவில் வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் ரசித்த ஹேமஜித் சில்வா தெரிவித்தார்.

No comments: