கோவிட் - 19 காரணமாக அமுலிலுள்ள நடமாட்டத் தடை காரணமாக அன்றாடம் நாட்கூலி வேலைசெய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் தமது கடும்பத்தைப் பாதுகாத்துவரும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட எருவில், மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய பகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு புதன்கிழமை(02) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ் அவர்களின் சொந்த நிதியில் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.
தமது நிலமை அறிந்து தாமாக முன்வந்து மனமுவந்த காலடிக்கே கொண்டுவந்து உலர் உணவுப் பொருட்களை வழங்கிய மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ் அவர்களுக்கு அப்பகுதி மக்கள நன்றிளைத் தெரிவித்துள்ளனர்.







No comments: