News Just In

6/02/2021 04:11:00 PM

தீக்கிரையான கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் இடைநிறுத்தம்...!!


கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பலில் நைட்ரையிட் கசிவு காரணமாக கடந்த 19 ஆம் திகதி தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து இந்தியக் கடற்படையின் உதவியுடன் இலங்கை கடற்படையினர் கப்பலின் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அதனையடுத்து, தீயால் எரிந்துப் போன இந்தக் கப்பலை ஆழ்கடலுக்கு இட்டுச் செல்லுமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்று பணிப்புரை விடுத்திருந்தார்.

இதனையடுத்து, தீக்கிரையான எம்.வீ. எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

சால்வர் குழுவுடன் இணைந்து இலங்கை கடற்படை குறித்த பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தீக்கிரையான எம்.வீ. எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 22 மைல் தொலைவில் இக்கப்பலின் பின் பகுதி மோதியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
















No comments: