News Just In

6/25/2021 09:21:00 AM

நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசிய பாடசாலைக்குமூன்று மாடிகள் கொண்ட தொழில்நுட்ப ஆய்வு கூடம்- மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அதிபர் நன்றி பாராட்டு!!


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலைக்கு தொழில்நுட்ப ஆய்வு கூடம் அமைப்பதற்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் வழங்கிய வாக்குறுதியை தனது அயராத முயற்சியினாலும் அர்ப்பணிப்பினாலும் நிறைவேற்றிக் தந்துள்ளமைக்கு கல்லூரியின் அதிபர் ஏ.அப்துல் கபூர் நன்றி தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

ரூபா 145,300,000 நிதி ஒதுக்கீட்டில் மூன்று மாடிகள் கொண்ட தொழில்நுட்ப ஆய்வு கூடம் இப்பாடசாலையில் அமைக்கப்படவுள்ளது. அதற்கான அனுமதியை மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாமின் சிபாரிசுடன் கல்வி அமைச்சு வழங்கியுள்ளது.

எனவே, இக்கட்டிட அமைவுக்கு அங்கீகாரம் வழங்கிய ஜனாதிபதி, பிரதமர், கல்வி அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கும் இதற்காக அச்சாணியாக இருந்து உழைத்த மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம், துணைபுரிந்த வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன்;, மாவட்ட பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹிர் (வலயக்கல்வி அலுவலகம் கல்முனை), அங்கீகாரம் வழங்கிய கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளை பாடசாலை சமூகம், பிரதி, உதவி அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் அமைப்பு உறுப்பினர்கள், முகாமைத்துவ குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக தெரிவித்துக்கொள்வதாக பாடசாலையின் அதிபர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் அதிபர் காலத்தில் இரண்டு முறை இப்பாடசாலையை விட்டு தவறிச் சென்ற இந்த தொழில் நுட்ப ஆய்வுகூடம், மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாமின் முயற்சியினால் அல் - அஷ்ரக் தேசிய பாடசாலை (75 ஆவது ஆண்டு) பவள விழா காணும் தருவாயில் கிடைத்திருப்பது பாடசாலையின் மற்றுமொரு மைல்கல்லாகும்.

No comments: