News Just In

6/11/2021 08:20:00 PM

வாழைச்சேனை இந்துக்கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்...!!


(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபராக ச.கு.கமலசேகரன் வெள்ளிக்கிழமை கடமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்

வாழைச்சேனை ஸ்ரீகைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் கலந்து கொண்டு பின்னர் ஆலய பரிபாலன சபையினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

கிரானை பிறப்பிடமாகக் கொண்ட ச.கு.கமலசேகரன் கல்குடா கல்வி வலயத்தில் முதலாவது தேசிய பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1992.11.02ல் போட்டிப் பரீட்சை மூலம் ஆரம்ப கல்வி ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் கிரான் விவேகானந்த வித்தியாலயம், கிரான் மகா வித்தியாலயம், வாழைச்சேனை இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.

பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகவும், கிழக்கு பல்கலைக்கழக பொதுக் கலைமாணி பட்டதாரியும், கலை முதுமாணி ஆசிரியர் கல்வியல் முதுமானி திறந்த பல்கலைக் கழகத்தில் மேற்கொண்டுள்ளார்.

2009.11.13ல் அதிபர் போட்டிப் பரீட்சை தரம் ii சித்தி பெற்று கிரான் விவேகானந்த வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றினார்

நான் ஆரம்ப கல்வி கற்ற கிரான் விவேகானந்த வித்தியாலயத்திலும் உயர்தரம் கல்வி கற்ற வாழைச்சேனை இந்துக்கல்லூரியிலும் அதிராக கடமையாற்ற கிடைத்தது பெரும் பாக்கியம் எனவும், கல்லூரியின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த அர்ப்பணிபுடன் செயற்படுவேன் என்றும் அதிபர் ச.கு.கமலசேகரன் தெரிவித்தார்.




No comments: