News Just In

6/01/2021 08:29:00 AM

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம்- ஐவர் கைது...!!


யாழ்ப்பாணம்- அரசடி பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த நபர்கள் மது அருந்தி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: