ஏ-9 வீதி வழியாக கிளிநொச்சி நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் கொக்காவில் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வாகன சாரதி உட்பட 7 பேரும் மணலுக்குள் புதையுண்டு இருந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதி வாகனத்தை அதிவேகமாக செலுத்தியமையாலே குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





No comments: