News Just In

6/23/2021 09:11:00 PM

200 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு மதிப்பீட்டு அறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்...!!


பாராளுமன்றம் அமர்வு இன்று(23) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.

இதன்போது கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் ஏனைய செலவுகளுக்காகவும் என தெரிவித்து நிதி அமைச்சரும் பிரதருமான மஹிந்த ராஜபக்ஷ்வினால் சபைக்கு சமர்ப்பிக்க இருந்த, 200 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு மதிப்பீட்டு அறிக்கை நேற்று ஆளுங்கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவினால் சமர்ப்பிக்கப்பட்து.

அதன்படி, அதுதொடர்பான விவாதம் இன்று சபையில் இடம்பெற்றது.

விவாதத்தின் இறுதியில் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் ஏனைய செலவுகளுக்காகவும் நிதி அமைச்சரால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட 200பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அது வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

No comments: