News Just In

6/02/2021 05:33:00 PM

சற்று முன்னர் வெளியாகிய செய்தி- பயணக்கட்டுப்பாடு மேலும் 14ஆம் திகதி வரை நீடிப்பு...!!


நாடுபூராகவும் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 7 ஆம் திகதி நீக்கப்படமாட்டாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதனடிப்படையில் எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் பயணக் கட்டுப்பாடு தொடர்ந்து அமுலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எதிர்வரும் 7ஆம் திகதி வரை நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீடிக்கப்படுவதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

No comments: