News Just In

5/18/2021 08:03:00 AM

நாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல்- முழு விபரம் வெளியாகியது...!!


இலங்கையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரண்டு மாவட்டங்களுக்குட்பட்ட 3 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படப்டுள்ளதோடு மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய கம்பஹா மாவட்டத்திற்குட்பட்ட கப்புகொட கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட செபஸ்டியன் வீதி, முதல் தெபதிய வீதி வரையிலான பகுதி, மற்றும் பிட்டிபன – லேல்லம கிராம சேவகர் பிரிவு, அம்பாந்தோட்டை மாவட்த்திற்குட்ட ரோட் கிராம சேவகர் பிரிவு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை 4 மாவட்டங்களை சேர்ந்த 8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

காலி மாவட்டத்திற்குட்பட்ட கொஹேன, தலகஸ்கொட, இம்பால்கொட கட்டுதம்பே ஆகிய பகுதிகளும், அம்பாந்தோட்டை மாவட்டத்திற்குட்பட்ட ரியவௌ நகர் பகுதியும்இ அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட பக்மீதெனிய ரண்ஹெல்கம சேறுபிட்டி மற்றும் பொலநறுவை மாவட்டத்தின் சிறிகெத்தா பகுதியும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, முல்லைதீவு மாவட்டத்தின் சில பகுதிகள் நேற்று இரவு 11 மணி முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, முல்லைதீவு, புதுக்குடியிறுப்பு மற்றும் முள்ளியவளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்த முல்லைதீவு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

எனினும், பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும், COVID 19 சுகாதார விதிகளை பின்பற்றியும் நினைவேந்தல் நிகழ்வினை நடத்த முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது

முல்லைத்தீவு மாவட்டத்தின் 7 பொலிஸ் பிரிவுகளினால், 27 பேருக்கு எதிராக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்ள தடைவிதிக்குமாறு கோரி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, இது தொடர்பான வழக்கு நேற்று முல்லைதீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா முன்னிலையில் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது

இதற்கமையவே, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும், COVID 19 சுகாதார விதிகளை பின்பற்றியும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இந்த நிலையிலேயே, முல்லைதீவு, புதுக்குடியிறுப்பு மற்றும் முள்ளியவளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

இதேவேளை, வவுனியாவில் இன்று முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டிக்க வவுனியா நீதிமன்றம் 10 பேருக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றில் முள்ளிவாய்கால் நினைவேந்தலை நினைவு கூர தடை கோரி நேற்று மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில், குறித்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், வவுனியாவின் குடியிருப்பு குளத்தடி, கலாசார மண்டபம், தோணிக்கல் பகுதியில் உள்ள கடை, பொங்கு தமிழ் நினைவுத்தூபி, வவுனியா நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வை நடத்த தடை உத்தரவு பிறப்பித்துள்ளது

இதன்படி, தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், .சிவமோகன், வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி .ஜெயவனிதா உள்ளிட்ட 10 பேருக்கு இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: