குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அவரது கணவன் மதுபானம் அருந்தும் மதுபானத்தில் நச்சு திரவத்தை கலந்ததனால் அதனை குடித்த கணவன் மயக்க நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபர் அருந்திய மதுபானத்தை வைத்திய அதிகாரிகள் பரிசோதித்து அதில் நச்சுதிரவம் கலக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதனையடுத்து குறித்த நபரின் 51 வயதுடைய மனைவியை சந்தேகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
குறித்த பெண்ணுக்கும் கணவனுக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .
இதில் கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது கொரோனா காரணமாக அவரை நீதவான் பிணையில் விடுவித்துள்ளார்.

No comments: