News Just In

5/12/2021 05:26:00 PM

மரண சடங்கு மற்றும் திருமண சடங்கு தொடர்பில் புதிய சுகாதார நடைமுறைகள் வெளியாகியது...!!


நாட்டில் ஏற்படும் உயிரிழப்பவர்களின் பின்னர் (கொவிட் அல்லாத) உடல்களை வைத்தியசாலையில் இருந்து ஒப்படைக்கப்பட்டு 24 மணித்தியாலத்திற்குள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், மரண நிகழ்வில் ஒரே தடவையில் ஆகக்கூடியது 15 பேர் மாத்திரமே பங்குப்பற்ற முடியும் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை,திருமண வைபவம், விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பதிவு திருமணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த நிகழ்வில் ஆகக்கூடியத 15 பேர் மாத்திரமே பங்குபற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: