News Just In

5/12/2021 06:33:00 PM

திருகோணமலை- கிண்ணியாவில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்க நடவடிக்கை!!


எப்.முபாரக்
கொரோணா தொற்றாளர்களுக்கான சிகிச்சை அளிக்கும் வகையில் தனிமைப்படுத்தல் நிலையத்தினை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் ஏற்பாட்டில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்காக பொருத்தமான இடமாக நடுத்தீவு ஆயுர்வேத வைத்தியசாலை, பிரதேச சபையின் விருந்தினர் விடுதி மற்றும் சமூக பராமரிப்பு நிலையம் ஆகிய மூன்று இடங்களையும் தெரிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவைகளை நடைமுறைப்படுத்த பிராந்திய சுகாதார பணிமனை, கிண்ணியா பிரதேச சபை மற்றும் இராணுவத்தினர் ஒன்றிணைந்து செயல்பட இன்று(12) இடம் பெற்ற கூட்டத்தில் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்போது பிரிகேடியர் சாந்த பெரேரா, பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஜி.எஸ். கொஸ்தா, சுகாதார வைத்திய அதிகாரிகளான வைத்தியர் றிஸ்வி, வைத்தியர் அஜித், பிரதேச சபைத் தவிசாளர் கே.எம். நிஹார் மற்றும் பிரதேச செயலாளர் முகம்மது கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.






No comments: