News Just In

5/18/2021 11:30:00 AM

கொழும்பு துறைமுகநகர ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளது- உயர் நீதிமன்ற தீர்ப்பை சபாநாயகர் அறிவிப்பு!!


கொழும்பு துறைமுகநகர ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதாக உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று (18.05.2021) சபாநாயகரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பும், விசேட பெரும்பான்மையும் அவசியம் என்றும் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தில் மேலும் குறிப்பிட்டிருப்பதாக சபாநாகர் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் சட்டமூலத்தில் அரசியல் அமைப்புக்கு முரணாக காணப்படும் சரத்துக்கள் திருத்தப்படுமாக இருந்தால், சாதாரண பெரும்பான்மையுடன் பாராளுமன்றில் நிறைவேற்ற முடியும் என்றும் உயர்நீதிமன்ற வியாக்கியானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: